சீன அதிபர் குறித்த வதந்திகளில் வெளியுறவுத்துறை, உள்துறை அமைதி காப்பது ஏன்..?

0 2721

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில் வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஏன் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ராணுவத்திற்கும் இடையே விரிசல் இருப்பதாகவும் சீனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பதால் ஆட்சிக் கவிழ்ப்பு கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சீனாவை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்றும், மூத்த ராணுவத் தளபதி லி கியோமிங் அதிபராகலாம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments