ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டெடுப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணியில், வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 85 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடிக் கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியுடன் அகழாய்வு பணி நிறைவடைய இருப்பதாகவும், இதையடுத்து மத்திய அரசு அறிவித்தபடி அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments