நள்ளிரவில் உபர் ஆட்டோவில் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவி புகார்

0 2866
நள்ளிரவில் உபர் ஆட்டோவில் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவி புகார்

சென்னையில் நள்ளிரவில் உபர் ஆட்டோவில் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்தப் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை தரமணியில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் பயிற்சி பத்திரிக்கையாளரான இளம் பெண் ஒருவர், நேற்றிரவு தனது தோழியுடன் ஈசிஆர் பகுதியில் இருந்து தங்கியிருந்த விடுதிக்கு உபர் ஆட்டோவில் வந்துள்ளார். விடுதிக்கு வந்திறங்கியதும் திடீரென ஆட்டோ ஓட்டுநர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுறது.

கூச்சலிட்டு உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்தது குறித்து விவரித்துள்ள மாணவி, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பெண் போலீஸ் ஒருவர் கூட இல்லாமல், தன்னிடம் விசாரித்த காவலர் அலைகழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

தான் பயணித்த ஆட்டோ, உட்பட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ள மாணவியின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments