லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து நீர்வளத்துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு
சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து நீர்வளத்துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தரமணி நீர்வளத்துறை அலுவலகம் வந்த நபர் ஒருவர், தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என்றும் லஞ்சப் புகார்கள் மீது விசாரிக்க வேண்டும் என்றும் கூறி உதவி பொறியாளர் அசோகனை தனியே அழைத்துச் சென்று 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
வீட்டில் போதிய பணம் இல்லாததால், மனைவி அருள்மொழியுடன் கூட்டுக் கணக்கு வைத்திருக்கும் லாக்கரில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, லாக்கர் சாவியுடன் அசோகனும், போலி அதிகாரியும் வங்கிக்குச் சென்றனர்.
இது குறித்து, கணவரின் சகோதரரான கடலூர் டி.எஸ்.பி. அண்ணாதுரையிடம், அருள்மொழி கூறிய நிலையில், அவர் இது பற்றி விசாரித்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரி போலியாக இருக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வங்கி மேலாளரிடம் லாக்கரை திறக்க அனுமதிக்க வேண்டாம் என அசோகனின் மனைவி தொலைபேசியில் கூறியதால், வங்கியில் அவ்வாறே அசோகனுக்கு மறுப்பு தெரிவிக்க, போலி அதிகாரியாக வந்தவர் உஷாராகி தப்பிச்சென்றார்.
Comments