தொழிலதிபரை கடத்தி ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு.? - காவல் நிலையத்தில் புகார்..

0 2728

தொழிலதிபரை கடத்தி அவரது 3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக சென்னை மெரினா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூரைச் சேர்ந்த 55 வயதான அமரராம், நகை விற்பனை மற்றும் அடகு கடை வைத்து தொழில் செய்கிறார்.  கடந்த 16-ம் தேதி வியாபாரம் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி, மெரினா கடற்கரைக்கு, சிலர் அவரை அழைத்துள்ளனர்.

அதன்படி கலங்கரை விளக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து காத்திருந்த அமரராமை, சிலர் மிரட்டி காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

அவரை காரிலியே வைத்து மிரட்டி பின்னர் அங்கிருந்து திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற நபர்கள், அமரராம் பெயரில் நாவலூர் பகுதியில் உள்ள அவரது 58 செண்ட் அளவிலான 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 60 லட்ச ரூபாய்க்கு எழுதி வாங்கிக் கொண்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments