பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் தாக்கப்பட்ட வழக்கு ; பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் தாக்கப்பட்ட வழக்கில், பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 22-ம் தேதி, குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த, பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி நிர்வாகி சரவணகுமார் ஆகியோரின் வாகனங்கள் மீது மர்ம நபர்கள், டீசல் நிரப்பப்பட்ட கவர்களை வீசியதுடன், கோடரியால் வாகனங்களை தாக்கி விட்டு தப்பியோடினர்.
தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் இன்று 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments