தேனியில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை..
தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூரில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள பிரபாகரன், 2 நாட்கள் சென்னையில் இருந்த நிலையில், இன்று ஊர் திரும்பினார்.
இந்நிலையில், அவருக்கு சொந்தமான புதிய பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments