ஆப்பிள் நிறுவனம் iPhone 14 மாடல்களை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு...
புதிய iPhone 14 மாடல்களை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
iPhone 14 மற்றும் iPhone 14 Plus ஆகிய மாடல்களை கடந்த 7ம் தேதி ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், புதிய தொழில்நுட்பங்கள், முக்கிய பாதுகாப்பு அம்சங்களுடன் iPhone 14 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகேவுள்ள Foxconn ஆலையில் அந்த போன் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு விற்பனைக்கு வருமென்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Comments