மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த தந்தை, மகன்...

0 2968

மன்னார்குடி அருகே வயலில் தேங்கிய மழை நீரை வடியவைக்க சென்ற விவசாயி மற்றும் அவரது மகன் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.

முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனியைச் சேர்ந்த விவசாயி அன்பரசன் தனது மகன் அருள்முருகனுடன் வயலில் தேங்கியிருந்த மழைநீரை வடிய வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது  திடீரென இடியுடன் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அன்பரசனின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments