ஆவின் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாளர்களே பால் திருட்டு..!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்களே பால்பாக்கெட்டுகளை திருடிச் செல்வதைப் போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
திண்டுக்கல்- நத்தம் சாலையில் தொழிற்பேட்டை பகுதியில் அரசு ஆவின் பால் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு கொண்டு வரப்படும் பால் பாக்கெட்டாக பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 100 லிட்டர் பால் திருடப்பட்டு வெளியில் பாதி விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments