பேருந்து நிலையத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பயணிகள் காயமின்றி தப்பினர்.
திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு செல்லக்கூடிய பாஜக பிரமுகர் ரமேஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு நேற்றிரவு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சென்றது.
அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்த நேரத்தில் அந்த பேருந்தின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசி விட்டு தப்பி சென்றனர்.
Comments