ஆன்லைன் ரம்மி விளையாடுவதை கணவர் நிறுத்தாததால், மனமுடைந்து மனைவி தற்கொலை
சென்னை பல்லாவரம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவதை கணவர் நிறுத்தாததால், மனமுடைந்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
பம்மலை சேர்ந்த ஞான செல்வன் என்பவர் மனைவி வகிதா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். பிரிண்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஞான செல்வன், இரவு முழுவதும் ஆன்லைன் ரம்மியில் பணம் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பள பணத்தை ஆன்லைன் ரம்மியில் அவர் இழந்து வந்த நிலையில், இது குறித்து வகிதா தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இதேபோல், அவர் பணத்தை இழந்த நிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வகிதா, அறையில் தாழிட்டுக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டதாக சொல்லப்படுகிறத
Comments