மறுவாழ்வு மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு... 4 பேர் கைது
சென்னை மாங்காடு அருகே மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை துன்புறுத்தியதாக உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருகம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் மறுவாழ்வு மையத்தில் அனுமதித்ததையடுத்து அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்ற சிறுவன், தன்னை அடித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக பெற்றோரிடம் கூறியுள்ளான்.
இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மையத்தின் உரிமையாளர்களை கைது செய்தனர்.
Comments