தன்னுடன் பேச மறுத்த காதலியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்

0 3723

காரைக்குடி அருகே, தன்னுடன் பேச மறுத்த காதலியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்ணன் என்ற இளைஞரும், அழகப்பா கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மாணவியும் 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். அண்மையில் கண்ணன், பெண் கேட்டு மாணவி வீட்டுக்கு சென்ற போது, மூத்த மகளுக்கு திருமணமான பிறகே இளைய மகளின் திருமணத்தை பற்றி பேச முடியும் என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் மாணவியின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளிவிட, இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றுள்ளது. அதன் பிறகு, மாணவி பேசுவதை நிறுத்திக் கொண்டதால் ஆத்திரமடைந்த கண்ணன், இன்று காலை மாணவி மாத்தூர் ரேஷன் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது வழிமறித்து கம்பியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments