பாட்டில்களில் பெட்ரோல் விற்கக்கூடாதென்று பங்குகளுக்கு தென் மண்டல ஐஜி அறிவுறுத்தல்

0 4474

பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாதென்று பங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், இரவு ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் குடைப் பாறைபட்டி பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பேகம்பூரை சேர்ந்த 29 வயதான சிக்கந்தர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments