பெட்ரோல் குண்டு தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்

0 5233

தமிழகத்தில் பா.ஜ.க.வினர் மீதான தாக்குதல்கள் இன்னும் நிற்கவில்லை என்றும் பெட்ரோல் குண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் ஆய்வு செய்து மதிப்பிட 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் பேட்டியளித்த அவர், பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளானவர்கள் வீடுகளுக்கு நேரில் செல்ல உள்ளதாகவும், பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசியதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments