'நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன், நீங்க இந்த தப்ப பண்ணாதீங்க' - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நடிகை லட்சுமி வாசுதேவன்

0 8781

சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சின்னத்திரை நடிகை லக்ஷ்மி வாசுதேவன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகை லக்ஷ்மி வாசுதேவனின் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு மர்ம நபர்களால் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோவில் பேசிய அவர், தனக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு விழுந்ததாக வந்த குறுஞ்செய்தியின் லிங்கை கிளிக் செய்ததும் தனது போன் ஹேக் செய்யப்பட்டது மேலும் அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்தியில் 5000 ரூபாய் கடன் வாங்கியதாகவும் கடனை அடைக்காவிட்டால் அவரது புகைப்படம் மார்ஃப் செயப்பட்டு பகிரப்படும் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து மார்பிங் புகைபடத்தை அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத் காவல் நிலையத்தில் நடிகை தரப்பில் புகாரளித்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments