தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2566

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றோடு நிறைவடைவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அக்டோபர் முதல் புதன்கிழமைகளில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என தெரிவித்தார்.

இதுவரை 96.55 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 91.39 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளதாகவும், இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி 30ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் 465 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலும், 352 பேருக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments