லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறி, பீரோவில் இருந்து 60,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்.!

0 2974

சென்னையில், சி.எம்.டி.ஏ அதிகாரி வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறி, சோதனை நடத்துவது போல் நாடகாமாடி பீரோவில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ராஜனுக்கு, வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என கூறி அவரை அலுவலகம் வர வைத்து பின்னர் அவருடனே ராஜனின் வீட்டிற்கு சென்ற அந்த நபர், பீரோவை சோதனை செய்து அதிலிருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டார்.

பின் இருவரும் ஜீப்பில் சி.எம்.டி ஏ அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, அந்த நபர் தான் இருசக்கர வாகனத்தில் வருவதாக கூறி பாதியில் இறங்கி உள்ளார்.நீண்ட நேரமாகியும் அவர் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜன் போலீசில் புகார் அளித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments