பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவர் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்றும் கோவை மாநகரில் கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தாமரை கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார் என்றும் டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.
Comments