பெட்ரோல் பங்க் உரிமையாளரை கடத்த முயன்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது!

0 2970

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை கடத்த முயன்றதாக  போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அய்யம்பாளையத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும், அதிமுக நிர்வாகியுமான சந்திரசேகரை,  4 பேர் காரில் கடத்த முயன்றனர். 

அவர் சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, 4 பேரையும் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் 4 பேரும், சென்னையில் காவல் தொழில்நுட்ப பிரிவில் ஆய்வாளராக பணிபுரியும் அன்பழகன், கணக்கம்பாளையம் ரத்தினசாமி , சகோதரி மேகலா , அவருடைய நண்பர் கார்த்திகேயன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரத்தினசாமியிடம்  வாங்கிய பணத்தை சந்திரசேகர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், கடத்தி பணம் வாங்க இம்முயற்சி நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments