"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
போலி தட்கல் மென்பொருளை விற்பனை செய்து ரயில்வேக்கு 56 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நபர் கைது.!
போலி தட்கல் மென்பொருளை விற்பனை செய்து ரயில்வேக்கு 56 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பீகார் மாநிலம் தனபூரைச் சேர்ந்த சைலேஷ் யாதவ், போலி மென்பொருளை உருவாக்கி டிக்கெட் தரகர்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சைலேஷ் யாதவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments