ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் பெண்ணின் பணப்பையை பறித்துச்சென்ற மர்மநபர்.. போலீசார் விசாரணை.!
ஆந்திர மாநிலத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் பெண்ணின் பணப்பையை மர்மநபர் பறித்துச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அம்பேத்கர் கோண சீமா மாவட்டம், ராமுல பாளையத்தில் உள்ள வங்கியொன்றில் பெண் ஒருவர் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ஒரு லட்சம் ரூபாயைக் கடனாக பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இதனை நோட்டமிட்ட ஒரு மர்மநபர் ஆள் அரவமற்ற சந்து ஒன்றில் வைத்து அப்பெண்ணிடமிருந்து பணப்பையை பிடுங்கி தயாராக இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அவனது கூட்டாளியுடன் தப்பியுள்ளான். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments