20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடைபெற்றார்

0 5715

லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், தனது கடைசி ஆட்டத்தில் விளையாடிய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.

லண்டனில் நடைபெற்ற போட்டியில் ஐரோப்பிய அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் பெடரர், ஸ்பெயினின் நடால் உள்ளிட்டோர் உலக அணிக்கு எதிராக விளையாடினர்.

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர் கடைசி போட்டியில் தோல்வியடைந்து டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். போட்டிக்கு பின், கண்ணீர் சிந்தியபடி பெடரர் அமர்ந்திருந்த நிலையில், அவருக்கு அருகே இருந்த நடாலும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

பின்னர் பேசிய பெடரர், தனக்கு தொடர் ஆதரவு அளித்த பெற்றோர், மனைவி உள்ளிட்டோருக்கு நன்றி என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments