தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற சிறுமி முதுகு தண்டுவட புற்றுநோயால் பாதிப்பு..!
மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற கிருஷ்ணகிரி மாவட்ட சிறுமி முதுகு தண்டுவட புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
சூளாமலை கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற அந்த 14 வயது சிறுமிக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் முதுகு தண்டவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் கட்டி வளர்ந்து மூன்றாம் நிலையை எட்டியுள்ளது.
மருத்துவ செலவிற்கு, 30 லட்ச ரூபாய் தேவைப்படும் நிலையில், 5 லட்ச ரூபாய் சத்யா தரப்பில் கட்டப்பட்டால் 20 லட்ச ரூபாய் வரை காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தை அடகு வைத்து ஒரு லட்ச ரூபாய் சத்யாவின் தந்தை கட்டியுள்ள நிலையில், தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Comments