தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

0 2674

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிகடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments