தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒயிட் சிமெண்ட் கொண்டு வந்த கப்பலில் 10 டன் போதைப்பொருள் பறிமுதல்

0 3719

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒயிட் சிமெண்ட் கொண்டு வந்த கப்பலில் கடத்திவரப்பட்ட 10 டன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் கப்பலில் அதிகாரிகள் சோதனை செய்த போது, ஒரு கண்டெய்னர் பெட்டியில் 100 மூட்டைகளில் கசகசா வடிவில் இருக்கும் பாப்பி சீட் என்னும் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ள அதிகாரிகள், துருக்கி, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளிலேயே இதனை பயன்படுத்த அனுமதி இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக கடத்தி வந்த நபர்கள் குறித்தும், கண்டெய்னர் பெட்டி யார் முகவரில் வந்தது எனவும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments