ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை பிடிக்க மூத்த தலைவர் சச்சின் பைலட் தீவிரம்
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருப்பதால், முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார்.
ஒரே நபர் 2 பதவிகளை வகிக்க கூடாது என்ற விதி இருப்பதால், முதலமைச்சர் பதவியை அசோக் கெலாட் ராஜினாமா செய்யக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் கேரளா சென்றிருந்த சச்சின் பைலட், அங்கிருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று மதியம் திரும்பினார்.
பின்னர் நேராக சட்டப்பேரவை சென்று சபாநாயகர் சிபி ஜோசி மற்றும் கட்சி கொறடா மகேஷ் ஜோஷியை சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இதேபோல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களையும் சச்சின் பைலட் சந்தித்து பேசினார்.
Comments