ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பின் பொறுப்பாளர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீச்சு..!
கோயம்புத்தூர் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து நடந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Comments