திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27ந் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம்

0 3771

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு தேவையான தர்பை பாய், தர்பை கயிறு ஆகியவை கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

இக்கோவில் பிரம்மோற்சவம் வருகிற 27 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தின் துவக்க நாள் அன்று கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னதாக கோவில் தங்க கொடி மரத்தில் தர்பையால் தயார் செய்யப்பட்ட பாய் சுற்றி வைக்கப்படும்.

அதன் பின்னர் தர்பையால் தயார் செய்யப்பட்ட கயிறு மூலம் கருடன் படம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்படும். இதற்காக 22 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்ட தர்ப்பை பாய் ,  200 அடி நீளம் உள்ள தர்பையால் தயார் செய்யப்பட்ட கயிறு  ஆகியவை பயன்படுத்தப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments