அரசு மருத்துவமனையில் திடீரென நின்ற லிப்ட்... ஒருமணிநேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிக்கித் தவித்த பெண் துப்புரவு பணியாளர் மீட்பு!

0 3576

செங்கல்பட்டு, அரசு மருத்துவமனையில் திடீரென நின்ற லிப்டில், சிக்கித் தவித்த பெண் துப்புரவு பணியாளர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

உதயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜானகி, இந்த மருத்துவமனையில் துப்பரவு பணியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்  போல் பணியை முடித்துவிட்டு,  மூன்றாம் தளத்திலிருந்து, இரண்டாவது தளத்திற்கு  லிப்டில் வந்தபோது, லிப்டின் கதவு திடீரென திறக்க முடியாமல் நின்றது.

லிப்டில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருமணி நேரம் பரிதவித்தார். உடன் பணியாற்றுவோர் இரும்பு பைப்புகளால் கதவை உடைத்து, ஒருமணிநேரம் போராடி  ஜானகியை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments