பிஞ்சுக்குழந்தையும் கர்ப்பிணி தாய்மாரும் தரையில் தான் படுக்கனுமாம்..! அரசு மருத்துவமனை அட்ராசிட்டி

0 4720

நெல்லை அரசு ஹைகிரவுண்ட் மருத்துவமனையின் பிரசவ வார்டில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பிஞ்சு குழந்தைகளுக்கு படுக்கை ஒதுக்கப்படாமல் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள அவலத்தை பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார்.

தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருது நகர், கன்னியாகுமரி மக்கள் அதிக அளவில் செல்லும் மருத்துவமனை என்ற சிறப்புக்குரியது நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை..!

கர்ப்பிணி தாய்மார்களும், குழந்தை பெற்ற தாய்மார்களும் பல்வேறு ஊர்களில் இருந்து இந்த மருத்துவமனையை நாடிச்செல்கின்றனர். ((spl gfx in))அப்படி கடந்த 13 ந்தேதி இந்த அரசு மருத்துவமனைக்கு, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பிறந்து சில தினங்களேயான பிஞ்சுக்குழந்தையுடன் மேல் சிகிச்சைக்காக குழந்தையின் தாயை அழைத்துக் கொண்டு பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அங்கு படுக்கைகள் எல்லாம் காலியாக கிடந்த நிலையில் கைகுழந்தைகளையும், பில்ளை பெற்ற தாய்மார்களையும் தரையில் துணியை விரித்து படுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.

அங்குள்ள அறையில் கட்டிலுடன் கூடிய படுக்கைகள் காலியாக இருந்த நிலையில், தரையில் படுக்க இயலாமல் கொசுக்கடியில் குழந்தைகள் ஒவ்வொன்றாக வீறிட்டு அழுத நிலையிலும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அங்கிருக்கும் செவிலியர்களோ, ஏம்மா குழந்தையை சத்தம் போடாம இருக்க சொல்லும்மா, இல்லை குழந்தைக்கு பால் கொடுக்க சொல்லும்மா என்று அலட்சியமாக கூறி உள்ளனர்.

17ந் தேதி வரை தாய்க்கும் சேய்க்கும் அங்கு துணி விரிக்கப்பட்ட தரையில் படுக்க வைக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , அந்த 5 நாட்களும் ஏராளமான தாய்மார்கள் பிஞ்சுக்குழந்தையுடன் வராண்டா தரையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் அவலத்தை உடன் சென்ற பெண் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்த தாய்மார்கள், இரு தினங்கள் மட்டுமே கட்டிலில் படுக்க வைக்கப்படுவதாகவும் அடுத்தடுத்த நாட்களில் அந்த பெண்களும் குழந்தையுடன் தரையில் படுக்க வைக்கப்படுவதாக தெரிவித்த அந்த பெண், பிரசவத்திற்காக பெண்களை அழைத்து செல்லும் போதும், பிரசவத்திற்கு பின்னர் வார்டுக்கு அழைத்து வரும் போதும் அங்குள்ள ஊழியர்கள் லஞ்சமாக பணம் பெறுவதாக புகார் தெரிவித்தார்

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் மருத்துவர் ரவிச்சந்திரன், அப்படி ஒரு சம்பவம் நிகழ வாய்ப்பில்லை என்றும் சுகபிரசவம் ஆனாலே ஒரு வாரம் கழித்து தான் வார்டுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் பிஞ்சு குழந்தைகளை வெளியே ஒரு போதும் வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார்.

குழந்தைகளையும், தாய்மார்களையும் தரையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ ஆதாரத்தை கையில் கொடுத்த பின்னரும், அது அண்டண்டர்கள் என்று விளக்கம் அளித்தால், அங்கு என்ன நடக்கிறது என்பதை சுகாதாரத்துறை தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments