ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்.. போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தல்!
உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உக்ரைன் போர் உலகின் அனைத்து நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
உணவுப் பொருள், எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கான பாதிப்புகள் தொலைதூர நாடுகளிலும் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அணு ஆயுத மிரட்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் சீனாவை சாடிய ஜெய்சங்கர் தீவிரவாதிகளுக்குத் தடை விதிக்க முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு சர்வதேச பொருளாதாரத் தடை உள்ளிட்டவற்றை விதிக்க அமெரிக்காவும் இந்தியாவும் மேற்கொள்ளும் முயற்சிகள் சீனாவால் தடுத்து விடப்படுகின்றன .இதனை சுட்டிக் காட்டிய ஜெய்சங்கர் உலகின் மிகவும் பயங்கரமான நபர்களுக்கு இத்தகைய வெளிப்படையாக பாதுகாப்பு அளிப்பதைக் கைவிடுமாறு சீனாவை வலியுறுத்தினார்.
Comments