டிக்-டாக் சவால் படி இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைக்க வேண்டாம்.. அமெரிக்க மக்களுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை..!
டிக்-டாக்கில் பரவிவரும் சவாலின் படி மக்கள், இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைக்க வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் டிக்-டாக் செயலியின் வழியாக, ஸ்லீப்பி சிக்கன் என்ற பெயரில் கோழி இறைச்சியை இருமல் மருந்தில் சமைத்து சாப்பிடும் விநோத போட்டி பரவி வருகிறது. இதன்படி பலர் இருமல் மருந்தான Ny quil லில் கோழி இறைச்சியை சமைத்து டிக் டாக்கில் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைப்பது ஆபத்தான செயல் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்துள்ளது. மருந்தை கொதிக்கவைப்பதால் அதன் பண்புகள் மாறி ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருமல் மருந்தில் சமைத்து உண்ணாவிட்டாலும் கூட, கொதிக்க வைக்கும் போது வெளியாகும் அதிகளவு மருந்து சுவாசிக்கும் போது நுறையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments