சண்டிகரில் ஆளும் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்..!
சண்டிகரில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டை நோக்கி பேரணியாக சென்ற பா.ஜ.க.வினரை போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து கலைத்தனர்.
மாநில அரசு 6 மாத கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள பா.ஜ.க.வினர், பகவந்த் மானின் இல்லம் நோக்கி திரளாக சென்றனர்.
தடுப்புகள் அமைத்து போலீசார் அவர்களை தடுக்க முயன்ற நிலையில், அதனை மீறி முன்னேறிச் சென்ற பா.ஜ.க.வினர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.
Comments