16 வயது மகள் காதலனுடன் சென்றதால், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை முயற்சி.. தாய் பலி.!

0 7125

சேலத்தில் 16 வயது மகள் காதலனுடன் சென்றதால், மனமுடைந்த பெற்றோர் பூச்சிமருந்தை உணவில் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் தாய் உயிரிழந்தார்.

சேலம் மாவட்ட்தை சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள்11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரும் சலீம் என்ற 23 வயது வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி முடிந்து வந்த மாணவியை சலீம் தன்னுடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணவியின் பெற்றோர் பூச்சிமருந்தை உணவில் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், மாணவியின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற சலீமை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments