தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், தென் தமிழககடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments