திருச்சி ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்.. ஓடிவந்து காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்

0 3128

திருச்சி ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு பெண்ணை ரெயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் தக்க சமயத்தில் காப்பாற்றினார்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் Express ரயில் புறப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சுமார் 45 வயதுடைய ஒரு பெண்மணி தோளில் கனத்த பையுடன் அவசர, அவசரமாக ஓடும் ரயிலில் ஏற முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது பிடி நழுவி, பிளாட்பாரத்திற்கும், தண்டாவாளத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்க இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தோடி வந்து அந்த பெண்மணியை பிளாட்பாரத்திற்கு இழுத்து காப்பாற்றினார்.

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. உயிரை பணயம் வைத்து ஓடும் ரெயிலில் ஏறக்கூடாது என்று அந்த பெண்மணிக்கு அனைவரும் புத்திமதி கூறி அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments