புதிதாக அமையவுள்ள 3 வழித்தடங்களிலும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்க திட்டம் - சென்னை மெட்ரோ
சென்னையில் மெட்ரோ ரயில்கள் 3 புதிய வழித்தடங்களில் ஓட்டுநர்கள் இன்றி தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகள் 63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்திலிருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான திட்டப்பணிகள் அனைத்தும் வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments