பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் கஞ்சா போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்... தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்த சக பயணிகள்

0 4672

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம்  கஞ்சா போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட  இளைஞரை தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் சக பயணிகள் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டையிலிருந்து மறமடக்கிக்கு நேற்றிரவு சென்ற பேருந்தில் பயணித்த இளம்பெண்ணின் தாவணியை, வன்னியன்விடுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பிடித்து இழுத்ததோடு, காலையும் உரசியதாகக் கூறப்படுகிறது.

இளம்பெண் சத்தமிடவே, சக பயணிகள்  பாண்டியனை மடக்கி கை கால்களை கட்டிப் போட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  காவல்துறையினர் வந்து பாண்டியனை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments