பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வரவுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அறிவித்த 2 சங்கங்கள்

0 3077

பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் 2 சங்கங்கள் சார்பில் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லைக்கு குறைந்த பட்சம் 1230 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 3,920 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை செல்ல 1,230 ரூபாயில் இருந்து 3070 ரூபாய் வரை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் புறப்படும் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு அளவிற்கு மாறுபட்ட கட்டணத்தை அதன் சங்கங்கள் அறிவித்துள்ளதால், பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் பேருந்துகளுக்கான குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணங்களாக இருக்கை வசதி, படுக்கை வசதி, குளிர்சாதன வசதிகளுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments