பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதல்கள்.. ஐநா.சபையில் பாகிஸ்தான் மீது இந்திய அரசு குற்றச்சாட்டு!
பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக ஐநா.சபையில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் சமூக கூடுதல் செயலர் ஸ்ரீநிவாஸ் கோட்டூ நியுயார்க்கில் நடைபெற்ற ஐநா.கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது காஷ்மீரில் சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி பாகிஸ்தான் கூறும் புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக அந்நாட்டில் அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சுட்டிக் காட்டினார்.
நூற்றுக்கணக்கான பெண்கள் கட்டாயத் திருமணம், கட்டாய மதமாற்றம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments