வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தனது வைப்புத்தொகையை எடுத்த பெண்மணி.. சரணடையப்போவதாக பேட்டி..!
லெபனான் நாட்டில், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தனது வைப்புத்தொகையை எடுத்த பெண்மணி விரைவில் சரணடையப்போவதாகத் பேட்டியளித்துள்ளார்.
கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் லெபனான் அரசு, வங்கியிலிருந்து பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பலர் துப்பாக்கி முனையில் மிரட்டி வைப்புத்தொகையை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 28 வயதாகும் சலி ஹஃப்பீஸ் என்ற பெண் தங்கையின் மூளை புற்றுநோய் சிகிச்சைக்காக, பொம்மை துப்பாக்கியால் வங்கி ஊழியர்களை மிரட்டி தங்கையின் வங்கி கணக்கிலிருந்த 13,000 டாலர்களை எடுத்துச்சென்றார்.
பேஸ்புக்கில் விமான நிலையம் செல்வதாக பதிவிட்டு போலீசாரை குழப்பிய சலி ஹஃப்பீஸ், கர்ப்பிணி போல் வேடமிட்டு நூலிழையில் தப்பியுள்ளார்.
கரடுமுரடான பெக்கா பள்ளத்தாக்கில் தலைமறைவாக இருந்தபடி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், நீதிபதிகள் வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டதும் சரணடையபோவதாகத் தெரிவித்தார்.
Comments