108 ராமஜெயம் எழுதி செத்து போக வேண்டிய விபரீத பள்ளி மாணவி.. யாருடைய நினைப்பும் வரக்கூடாது என கடிதம்..!
108 ராமஜெயம் எழுதி வைத்துவிட்டு பள்ளிக் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவியின் சடலம் பிணகூறாய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது...
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
செவ்வாய்கிழமை இரவு 7.30 மணி அளவில் விடுதி கழிவறையில் வைத்தீஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டினர்..
பள்ளி நிர்வாகம் மற்றும் அன்று பணியில் இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் பிணகூறாய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
மாணவியின் உறவினர்களுடன் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ,மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் அடிப்படையில், மாணவியின் சந்தேக மரண வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இடத்தினை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முருகானந்தம், ரமேஷ், காளீஸ்வரி ஆகியோர் 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் உடல் மாணவியின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் 108 ராமஜெயம் எழுதி வைத்துள்ள அந்த மாணவி அதன் நடுவில் . பிளீஸ் ... ஆஞ்சனேயா நா எப்படியாவதும் இன்னைக்கு அல்லது நாளைக்குள் செத்தரனும்... பிளீஸ்.... நா சாகும் போது யார் நனைப்பும் வரகூடாது.... என்று எழுதப்பட்டுள்ளது..!
இந்த கடிதத்தை உள்ளூர் போலீசாரிடம் பெற்று சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments