ஆவின் பால் பாக்கெட்டுக்குள் ஈ கிடந்தது தொடர்பாக பேக்கிங் நிறுவனத்துக்கு அபராதம்
மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டுக்குள் ஈ கிடந்தது தொடர்பாக பேக்கிங் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஆவின் டெப்போவில் இருந்து ஒருவர் பச்சை நிற பால் பாக்கெட் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று பாக்கெட்டை பார்த்தபோது, ஈ கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஈ கிடந்த காட்சியை வீடியோவாக எடுத்து அவர் வெளியிட்டார். சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகவே, பால் பாக்கெட் பேக்கிங் செய்யும் அங்கீத என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக மதுரை ஆவின் தலைமை மேலாளர் சாந்தி விதித்துள்ளார்.
மேலும் உதவி மேலாளர் சிங்கார வேலனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments