அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளருக்கு அரிவாள் வெட்டு

0 2764

கூடுவாஞ்சேரி அருகே பட்டப்பகலில் அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பெருமட்டுநல்லூரைச் சேர்ந்த செந்தில்குமார், காஞ்சிபுரத்தில் குடியிருந்து கட்டுமான தொழில் செய்த போது அவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமார், 5 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் பெருமாட்டுநல்லூரில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய செந்தில்குமாரை, செல்வி நகரில் வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பியுள்ளது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments