வெந்து தணிந்தது காடு.. மல்லிப்பூ பாடலுக்கு சத்தமா ஒரு ஓ...போடு.! ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சிக்கும் நடுவர்..!

0 31062
வெந்து தணிந்தது காடு.. மல்லிப்பூ பாடலுக்கு சத்தமா ஒரு ஓ...போடு.! ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சிக்கும் நடுவர்..!

வெந்து தனிந்தது காடு படத்தில் ஹிட் அடித்துள்ள மல்லிப்பூ பாடலில் கவிஞர் தாமரையின் கவித்துவமான தமிழ் வரிகளை பாடிக்கெடுத்துள்ளதாக தமிழ் தெரியாத பாடகி மதுஸ்ரீ மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை தமிழ் ஆர்வலர் ஆலங்குடி வெள்ளச்சாமி விமர்சித்துள்ளார்.

நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகி உள்ள வெந்து தனிந்தது காடு படத்தில், கவிஞர் தாமரையின் மயக்கும் வரிகளில், ஏ.ஆர் ரஹ்மானின் மந்திர இசையால் , மது ஸ்ரீயின் கொஞ்சும் குரலால் மல்லிப்பூ பாடல் ஊரெல்லாம் மணக்கிறது..!

யூடியூப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள இந்த மல்லிப்பூ பாடல், வெளியூரில் வசிக்கும் கணவனை பிரிந்து வாழும் மனைவி பாடுவதை போன்று உருவாக்கப்பட்டுள்ளது. மணமான பெண்ணின் தனிமை, வெறுமை, ஏமாற்றத்தை அடித்தட்டு மக்களுக்கும் புரிகின்ற வகையிலான எளிய தமிழில் பாடல் எழுதப்பட்ட நிலையில், தமிழ் தெரியாத பாடகி மது ஸ்ரீயின் குரலில் புரியும்படி இல்லை என்று விமர்சித்துள்ளார் பட்டிமன்ற நடுவரும், தமிழ் ஆர்வலருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி

இசை என்பது மேல் தட்டு மக்களுக்கானது அல்ல என்றும் எளிய மக்களும் புரியும் படி எழுதப்பட்ட ஒரு பாடலை தப்பும் தவறுமாக விழுங்கி விழுங்கி பாடி இருப்பது ஏற்புடையது அல்ல என்றும், வருங்காலத்திலாவது ஏ.ஆர்.ரஹ்மான் இது போன்று பாடல்களில் தமிழை கொலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments