தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.. அவருக்கு வயது 77..!
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 76...
உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் காலமானார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 வரை சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக பதவி வகித்தவர். அதிமுக சார்பில் சேடப்பட்டி தொகுதியிலிருந்து 4 முறை தமிழக சட்டப்பேரவைக்கும், பெரியகுளம் தொகுதியிலிருந்து 2 முறை மக்களவைக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக 2006 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி, அவர் திமுகவில் இணைந்தார்.
மறைந்த சேடப்பட்டி முத்தையாவின் இறுதிசடங்கு அவரது சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் நாளை நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments