"ஆ.ராசாவின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது"-அண்ணாமலை

0 4055

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, 2 நாள் பயணமாக மதுரைக்கு நாளை வர இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்துக்கு காலை 10 மணியளவில் வரும் ஜேபி நட்டாவுக்கு மாநில பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

நாளை மறுதினம் திருப்பத்தூர் செல்லும் ஜேபி நட்டா அங்கு மருதுபாண்டியர், வீரபாண்டியர் கட்டபொம்மன் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் மரியாதை செலுத்த உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

இந்து மதம் தொடர்பாக சர்ச்சை கருத்து வெளியிட்ட ஆ.ராசாவுக்கு எதிராக பேசும் பாஜகவினர் மீது திமுக அரசு போலி வழக்குகளை பதிவு செய்து கைது செய்வதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, எம்பி பதவியிலிருந்து ஆ.ராசாவை நீக்கக்கோரி நீலகிரி தொகுதியிலேயே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது என்றும், இது வரை 20 லட்சம் பேருக்கும் மேல் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் கூறினார்.

ஆ.ராசா குறித்த கேள்விக்கு காது கேளாது என தெரிவித்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு, புதுக்கோட்டை பாஜக நிர்வாகிகள் காது கேட்கும் கருவி வாங்கி அனுப்பியுள்ளார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments