ஹலால் என்ற வார்த்தை ஆவின் பொருள்களில் அச்சிடப்பட்டதால் சர்ச்சை - அமைச்சர் நாசர் விளக்கம்
ஹலால் என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் விற்பனை செய்ய முடியும் என்பதாலேயே ஆவின் பொருள்களில் அந்த வார்த்தை அச்சிடப்பட்டதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விளக்கமளித்துள்ளார்.
குக்கிங் பட்டரில் ஹலால் என அச்சிடப்பட்டு இருந்ததால், அதை சிலர் புறக்கணித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியது . இதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அமைச்சர் அளித்த விளக்கத்தில், ஹலால் என்ற வார்த்தையை அச்சிடும் நடைமுறை, அதிமுக ஆட்சியில் இருந்து தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments